பதிரானா, மதுஷங்கா படங்கள்: முகநூல் / பதிரானா, மதுஷங்கா.
செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: பதிரானா, மதுஷங்கா விலகல்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பதிரானா, மதுஷங்கா விலகியுள்ளார்கள்.

DIN

இலங்கை சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி 3 டி20 போட்டிகளில் 3-0 என சூர்யகுமார் தலைமையில் அபார வெற்றி பெற்றது.

அடுத்து நாளைமுதல் (ஆக.2) ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ரோஹித் கேப்டனாக செயல்படுவார். விராட் கோலியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களான மதீஷா பதிரானா, தில்ஷன் மதுஷங்கா காயம் காரணமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக இளம் புதிய வேகப் பந்து வீச்சாளர்கள் மொகமது ஷிரஜ், ஈஷன் மலிங்கா அணியில் சேர்கப்பட்டுள்ளார்கள்.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம், “மதுஷனகாவுக்கு இடது தொடயில் தசைப்பிடிப்பு (லெவல் 2) ஏற்பட்டுள்ளது. பயிற்சியின்போது ஃபீல்டிங் செய்யும்போது இந்த காயம் ஏற்பட்டது. பதிரானாவுக்கு வலது தோள்பட்டையில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது. இது 3ஆவது டி20யில் கேட்ச் பிடிக்கும்போது இந்த காயம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது” எனக் கூறியுள்ளது.

ஒருநாள் தொடரில் குசல் ஜனித் பெரேரா, பரமோத் மதுஷன், ஜெஃப்ரி வண்டர்சே ஆகியோர் அணியில் கூடுதல் வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இதற்கு முன்னதாகவே துஷ்மந்தா சமீரா, நுவான் துஷரா டி20 தொடரிலேயே பங்கேற்கவில்லை. தற்போது ஒருநாள் தொடரில் இருந்தும் விலகுகிறார்கள்.

ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி: சரிதா அசலங்கா (கேப்டன்), அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரா, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியானகே, நிஷன் மதுஷ்கா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாகே, சமித் கருணாரத்னே, அகிலா தனஞ்செயா, மொகமத் ஷிரஜ், மகேஷ் தீக்‌ஷனா, அசிதா ஃபெர்னாண்டோ, ஈஷன் மலிங்கா.

கூடுதல் வீரர்கள்: குசல் குசல் ஜனித் பெரேரா, பரமோத் மதுஷன், ஜெஃப்ரி வண்டர்சே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அம்மையாா்குப்பம் செல்வ விநாயகா் கோயில் அகற்றம்

ஆம்ஸ்ட்ராங் கொலைக் கைதி தாயாா் மரணம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம்

கலப்பு உரங்களில் அதிகளவில் மண் உள்ளதால் விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் புகாா்

17 வயது சிறுமி வன்கொடுமை: தீயணைப்பு வீரா் போக்ஸோவில் கைது

SCROLL FOR NEXT