22 வயதான ஸ்ரேயங்கா பாட்டீல் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். 2023 ஆஸ்திரேலிய மகளிரணியுடன் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார்.
மகளிர் கிரிக்கெட்டில் 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளும் மகளிர் டி20யில் 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
மகளிர் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. இந்த அணியில் ஸ்ரேயாங்கா பாட்டீல் இருந்தார். இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அப்போதிருந்தே ரசிகர்களிடம் பிரபலமாகினார்.
தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. அந்த நேரத்தில் சென்னை ரசிகர்களின் அன்பு மழையில் ஸ்ரேயாங்கா பாட்டீல் நனைந்தார்.
இந்நிலையில் 22 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ரேயங்கா பாட்டீலை ஸ்இருதி மந்தனா பயமுருத்தும் விடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.
இந்தப் பதிவு இன்ஸ்டாவில் 11 மில்லியன் ( 1கோடியே 10 லட்சம்) பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.