படம் | திண்டுக்கல் டிராகன்ஸ் (எக்ஸ்)
செய்திகள்

டிஎன்பிஎல் இறுதிப்போட்டி: திண்டுக்கல் டிராகன்ஸுக்கு 130 ரன்கள் இலக்கு!

டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிரான்கஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிரான்கஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்துள்ளது.

டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கோவை கிங்ஸ் முதலில் பேட் செய்தது.

கோவை கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ராம் அரவிந்த் 27 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அதீக் உர் ரஹ்மான் 25 ரன்களும், சுஜய் 22 ரன்களும் எடுத்தனர்.

திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் சந்தீப் வாரியர், வருண் சக்கரவர்த்தி மற்றும் விக்னேஷ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சுபோத் பாட்டீ ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் வேலை வேண்டுமா?

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக! மல்லை சத்யா குற்றச்சாட்டு

புத்திசாலித்தனமான லோகேஷ் கனகராஜ் படம்... கூலி குறித்து அனிருத்!

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

SCROLL FOR NEXT