ரோஹித் சர்மா படம் | AP
செய்திகள்

ஏமாற்றமாக இருக்கிறது, பேட்டிங் குறித்து ஆலோசனை இருக்கும்: ரோஹித் சர்மா

இலங்கைக்கு எதிராக தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

DIN

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (ஆகஸ்ட் 4) கொழும்புவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியடைந்தது. இலங்கை அணியில் சுழற்பந்துவீச்சாளர் ஜெஃப்ரி வாண்டர்சே 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அந்த அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும், மிடில் ஆர்டரில் பேட்ஸ்மேன்கள் விளையாடும் விதம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனவும் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: போட்டியில் தோல்வியடையும்போது எல்லா விஷயங்களும் நமக்கு ஏமாற்றமளிக்கும். இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்ததை மட்டும் காரணமாக கூற முடியாது. தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டது.

சிறிது ஏமாற்றமாக இருக்கிறது. ஆனால், கிரிக்கெட்டில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கும். நாங்கள் நன்றாக விளையாடவில்லை. நாங்கள் எப்படி விளையாடினோம் என்பது குறித்து அதிகம் யோசிக்க விரும்பவில்லை. ஆனால், மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வது தொடர்பாக அணியில் ஆலோசனை இருக்கும். ஜெஃப்ரி வாண்டர்சே நன்றாக பந்துவீசினார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி: சென்னையில் அக். 22 வரை கனரக வாகனங்களுக்கு வழித்தட மாற்றம்!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 20 மாவட்டங்களில் மழை!

துணிச்சல் அதிகரிக்கும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை: பொதுமக்கள் அவதி

மாற்றி யோசிப்போம்!

SCROLL FOR NEXT