செய்திகள்

ஈட்டி எறிதல் போட்டி இருப்பதே தெரியாது; அதிர்ச்சியளித்த சாய்னா நேவால்!

நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்லும் வரை தனக்கு ஈட்டி எறிதல் என ஒரு போட்டி இருப்பதே தெரியாது என சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.

DIN

நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்லும் வரை தனக்கு ஈட்டி எறிதல் என ஒரு போட்டி இருப்பதே தெரியாது என பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பாட்மின்டனில் சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியாவில் பாட்மின்டன் விளையாட்டில் புரட்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, விளையாட்டுத் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்த பெண்களுக்கு சாய்னா நேவாலின் வெற்றி மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தது.

34 வயதாகும் சாய்னா நேவால் அண்மையில் தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார். காமன்வெல்த் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் சாய்னா நேவால். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டி முதல் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ள அவர், நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்லும் வரை தனக்கு ஈட்டி எறிதல் என ஒரு போட்டி இருப்பதே தெரியாதென கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நீரஜ் சோப்ரா (கோப்புப் படம்)

சாய்னா நேவால் கலந்துகொண்டு பேசிய இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சி முழுவதுமாக இன்னும் வெளியிடப்படவில்லை. அந்த பாட்காஸ்டின் டீசர் விடியோவில் சாய்னா நேவால் பேசியதாவது: நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றபோதுதான் எனக்கு தடகளத்தில் ஈட்டி எறிதல் என ஒரு போட்டி இருப்பதே தெரிய வந்தது எனப் பேசியுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். அதற்கு முன்னதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு உலக ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

கடந்த ஆண்டு புடாபெஸ்டில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அவர், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT