முகப்பு
செய்திகள்

முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்க அணி 154 ரன்கள் முன்னிலை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 154 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 10:23 AM
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 154 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 357 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டெம்பா பவுமா 86 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, டோனி டி ஸார்ஸி அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் வாரிக்கேன் 4 விக்கெட்டுகளையும், ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆட்டத்தில் அடிக்கடி மழை குறுக்கிட்டதால் ஓவர்கள் முழுமையாக வீசப்படவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கீஸி கார்ட்டி அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஜேசன் ஹோல்டர் 36 ரன்களும், கிரைக் பிரத்வெயிட், மிக்கி லூயிஸ் மற்றும் வாரிக்கேன் தலா 35 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி மற்றும் அய்டன் மார்க்ரம் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தென்னாப்பிரிக்க அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்துள்ளது. டோனி டி ஸார்ஸி 14 ரன்களுடனும், அய்டன் மார்க்ரம் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் 154 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →