நியூசிலாந்து வீரர்கள்.  படங்கள்: பிளாக்கேப்ஸ் / எக்ஸ்
செய்திகள்

நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய முக்கியமான வீரர்கள்!

நியூசிலாந்து அணியின் தேசிய ஒப்பந்தத்தில் இருந்து முக்கியமான வீரர்கள் வெளியேறியுள்ளார்கள்.

DIN

நியூசிலாந்தின் நட்சத்திர வீரரான டெவான் கான்வே அந்நாட்டின் தேசிய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஏற்கனவே கேன் வில்லியம்சன், டிரெண்ட் போல்ட், லாக்கி பெர்குசன், ஃபின் ஆலன் ஆகியோர் முற்றிலுமாக தேசிய ஒப்பந்தத்தை மறுத்துள்ளார்கள்.

டெவான் கான்வே கேஷுவல் பிளேயிங் கான்ட்ராக்ட்டில் (தற்செயலான ஒப்பந்தம்) மட்டுமே கையெழுத்திட்டுள்ளார்.

நியூசிலாந்து அணிக்காக கான்வே 20 டெஸ்ட்டில் 1497 ரன்களும் 32 ஒருநாள் போட்டிகளில் 1246 ரன்களும் 50 டி20 போட்டிகளில் 1408 ரன்கலும் எடுத்துள்ளார்.

இது குறித்து 33 வயதாகும் கான்வே இது குறித்து பேசியதாவது:

இந்த முடிவை நான் சாதாரணமாக எடுக்கவில்லை. ஆனால் இதுதான் எனது குடும்பத்துக்கும் எனக்கும் தற்போது சரியானதாக இருக்குமென நினைக்கிறேன். நியூசிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதும் வெற்றி பெறுவதும் எனக்கு எப்போதும் விருப்பமானது.

வரும் டெஸ்ட் போட்டி குறித்து மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். ஏனெனில் இந்த ஐசிசியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றுக்கு இந்தப் போட்டிகள் முக்கியமானது. நான் தேர்வாகினால் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஷிப் டிராபியில் விளையாட ஆர்வமாக உள்ளேன் எனக் கூறியுள்ளார்.

25 வயதாகும் ஃபின் ஆலன் 22 ஒருநாள் போட்டிகளில் 582 ரன்களும் 47 டி20 போட்டிகளில் 1141 ரன்களும் எடுத்துள்ளார்.

”ஃபின் ஆலன் முழுவதுமாகவே நியூசிலாந்து அணியின் ஒப்பந்ததை மறுத்துள்ளார். ஆனால் தேவைப்பட்டால் அவரை அணியில் தேர்வு செய்வோம். மேலும் தற்போதைய சூழ்நிலையில் உள்ளூர் லீக் போட்டிகளில் அனைவரும் விளையாடுவதால் இந்த மாற்றங்களுக்கு தவமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. சிறந்த வீரர்களை தக்கவைத்துகொள்ள நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு” எனவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

கர்நாடகத்தில் மிதமான நிலநடுக்கம்!

கனவுகளுக்காக போராடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கதை | Women Cricket World Cup

SCROLL FOR NEXT