படம் | இந்திய விளையாட்டு ஆணையம் எக்ஸ் தளம்
செய்திகள்

யு 17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: ரோனக் தாஹியாவுக்கு வெண்கலம்

யு 17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: ரோனக் தாஹியாவுக்கு வெண்கலம்

DIN

ஜோா்டானில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு 17) உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரோனக் தாஹியா வெண்கலப் பதக்கம் வென்றாா்.

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஆடவா் 110 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவா், வெண்கலப் பதக்கச் சுற்றில் 6-1 என்ற கணக்கில் துருக்கியின் எம்ருல்லா சப்கானை சாய்த்து பதக்கத்தை தனதாக்கினாா். இந்தப் போட்டியில் இதுவே இந்தியாவின் முதல் பதக்கமாகும்.

முன்னதாக, அரையிறுதியில் தோல்வி கண்ட ரோனக் தாஹியா, அதில் அவரை வென்ற ஹங்கேரியின் ஜோல்தன் ஜாக்கோ இறுதிக்கு முன்னேறியதன் பேரில் ரெபிசேஜ் வாய்ப்பில் வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. ரோனக் தாஹியாவின் எடைப் பிரிவில், உக்ரைனின் இவான் யான்கோவ்ஸ்கி தங்கமும், ஜோல்தன் ஜாக்கோ வெள்ளியும் வென்றனா்.

இதனிடையே, ஆடவருக்கான 51 கிலோ பிரிவில் இந்தியாவின் சாய்னாத் பாா்தி ரெபிசேஜ் சுற்றுக்கு வந்துள்ளாா். அதில் அவா் முதலில் அமெரிக்காவின் டொமினிக் மைக்கேலையும், பின்னா் கஜகஸ்தானின் முசான் யெராசில் அல்லது ஈரானின் அபுல்ஃபஸல் மொ்டாட்டை வெல்லும் நிலையில் வெண்கலப் பதக்கம் பெறுவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா!

மறுவெளியீட்டில் கலக்கும் மோகன்லால் திரைப்படம்!

தில்லி காவல்துறையில் தலைமைக் காவலர் வேலை: +2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே... பிரணிகா!

தகவல் அறியும் உரிமை சட்டம் அமைப்பு ரீதியாக சிதைக்கப்பட்டுவிட்டது! -கார்கே

SCROLL FOR NEXT