மோனா அகர்வால்| அவனி லெகரா படம்: எக்ஸ்
செய்திகள்

பாரீஸ் பாராலிம்பிக்: தங்கம் வென்றார் அவனி லெகரா! மோனாவுக்கு வெண்கலம்

பாரீஸ் பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா தங்கம் வென்றார்.

DIN

பாரீஸ் பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா தங்கம் வென்றார். மூன்றாவது இடத்தைப் பிடித்த மோனா அகர்வாலுவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

பாரீஸ் பாராலிம்பிக்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான அவனி லெகரா, தகுதிச் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதிச்சுற்றில் 8 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இந்தியா சார்பில் அவனி லெகரா, மோனா அகர்வால் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா 249.7 புள்ளிகளுடன் முதலிடமும், தென் கொரியாவின் லீ யுன்ரி 246.8 புள்ளிகளுடன் இரண்டாமிடமும், மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் 228.7 புள்ளிகளுடன் மூன்றாமிடமும் பிடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அமைச்சர் Rajnath Singh சிங்குடன் விண்வெளி நாயகன் Subhanshu Shukla!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி வெளியீட்டுத் தேதி!

தவெக மாநாடு: தொண்டர்கள் 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT