ராபின் உத்தப்பா (கோப்புப் படம்) Instagram |Robbie Uthappa
செய்திகள்

ராபின் உத்தப்பாவுக்கு கைது ஆணை?

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் மோசடி செய்ததாக உத்தப்பா மீது குற்றச்சாட்டு

DIN

ராபின் உத்தப்பாவின் நிறுவன ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் மோசடி செய்ததாக உத்தப்பா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா இயக்குநராக உள்ள ஆடை நிறுவனமான செஞ்சுரி லைஃப்ஸ்டைல் பிராண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்துக்காக மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டது.

ஆனால், உத்தப்பாவின் நிறுவனத்தில் இருந்து பணியாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில் அந்தத் தொகையை சேர்க்கப்படவில்லை. மொத்தம் ரூ.23 லட்சத்து 26 ஆயிரத்து 602 உத்தப்பா தரப்பில் பாக்கி உள்ளது.

இதனையடுத்து, அவரது நிறுவன ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பெங்களூர் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சடாக்சரி கோபால் ரெட்டி தெரிவித்தார். இதுகுறித்து, உத்தப்பாவிடம் தெரிவித்திருந்தும், அதனை அவர் கண்டுகொள்ளாததால், அவர் மீது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பணமோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, உத்தப்பா மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதையடுத்து, உத்தப்பாவுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 23 லட்சத்து 36 ஆயிரத்து 602 ரூபாயை உத்தப்பா டிசம்பர் 27 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல்: விடைபெற்றாா் அஸ்வின்

பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’ - பதக்க வாய்ப்பை இழந்தாா் குகேஷ்

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவின் விருப்பத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

SCROLL FOR NEXT