ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசையில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் 853 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான ரவீந்திர ஜடேஜா 6-வது இடத்தில் உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோ ரூட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.