செய்திகள்

ரஞ்சி கோப்பையில் வரலாறு படைத்த டுவெல்த் ஃபெயில் இயக்குநரின் மகன்! 

DIN

பிரபல பாலிவுட் இயக்குநரான விது வினோத் சோப்ரா இயக்கத்தில் கடந்த அக்.27 ஆம் தேதி வெளியான திரைப்படம் டுவெல்த் ஃபெயில். 12 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மணிஷ் சர்மா என்பவர், தன் கடும் முயற்சிகளால் ஐபிஎஸ் அதிகாரியான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியது. ஓடிடியிலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. 

ரஞ்சி கோப்பையில் மிசோரம் அணிக்காக அசத்திவரும் அக்னி சோப்ரா 8 இன்னிங்ஸில் 767 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் இருக்கிறார். 

படம்: அக்னி சோப்ரா | இன்ஸ்டாகிராம்

தனது முதல் 4 போட்டிகளில் சதமடித்து வரலாறு படைத்திருக்கிறார். பலரும் இவரைப் பாராட்டி வருகிறார்கள். 

இந்நிலையில் அக்னி சோப்ரா, “ஐபிஎல்-இல் தேர்வாகும் அளவுக்கு நான் விளையாடாமல் இருக்கலாம். ஆனால் என்னுடைய திறமையினால் மட்டுமே நான் தேர்வாக வேண்டும் என நினைக்கிறேன். எனது கனவு நனவாக எனது திறமை போதுமானதாக இருக்க வேண்டும். கிரிக்கெட் எனது கனவு; அப்பாவுடையது அல்ல” எனக் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT