செய்திகள்

2-வது ஒருநாள்: மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (பிப்ரவரி 4) சிட்னியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. 

ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சீன் அப்பாட் 69 ரன்கள் எடுத்தார். அதில் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 41 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் குடகேஷ் மோதி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அல்சாரி ஜோசப் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்டு தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 43.3 ஓவர்களில் 175 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கீசி கார்ட்டி 40 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் சீன் அப்பாட் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வில் சதர்லேண்டு 2 விக்கெட்டுகளையும், ஆரோன் ஹார்டி மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சீன் அப்பாட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!

வருவாய்த் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ மீண்டும் இணையதளங்களில் எவ்வாறு பரவுகிறது?: உயா்நீதிமன்றம் கேள்வி

சங்கா் ஜிவால் இன்று ஓய்வு! புதிய டிஜிபி யார்?

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கி விபத்து

SCROLL FOR NEXT