செய்திகள்

இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்தியை தகர்த்த இந்திய பந்துவீச்சாளர்கள்!

இங்கிலாந்து அணியின் பேஷ்பால் யுக்தியை இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தகர்த்துள்ளனர்.

DIN

இங்கிலாந்து அணியின் பேஷ்பால் யுக்தியை இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தகர்த்துள்ளனர்.

இந்தியா மற்றும்  இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. மீதம் இரண்டு நாள்கள் இருக்க இங்கிலாந்தின் வெற்றிக்கு 332 ரன்களே தேவைப்பட்டன. இந்த நிலையில், இன்று ஆட்டத்தைத் தொடர்ந்த இங்கிலாந்து இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 292 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இன்று ஒரே நாளில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இந்த வெற்றியின்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய  அணி 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது: இந்த மாதிரியான சூழ்நிலைகளில் டெஸ்ட் போட்டியை வெல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தர வேண்டும் என விரும்பினேன். அவர்கள் வெற்றியைப்  பெற்றும் தந்துவிட்டனர். ஜஸ்பிரித் பும்ரா எப்போதும் எங்களது சிறப்பான வீரர் என்றார். 

இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்திக்கு போதுமான இலக்கு என்னவென்று இந்தியாவுக்குத் தெரியவில்லை என இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் தலைவன் தலைவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

SCROLL FOR NEXT