செய்திகள்

இளம் வீரர்களை நான் வழிநடத்த வேண்டும்: ஜஸ்பிரித் பும்ரா

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பந்துவீச்சு மாற்றத்தை சந்தித்து வரும் நிலையில் இளம் வீரர்களை தான் வழிநடத்த வேண்டியுள்ளதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். 

DIN

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பந்துவீச்சு மாற்றத்தை சந்தித்து வரும் நிலையில் இளம் வீரர்களை தான் வழிநடத்த வேண்டியுள்ளதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 9  விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பந்துவீச்சு மாற்றத்தை சந்தித்து வரும் நிலையில் இளம் வீரர்களை தான் வழிநடத்த வேண்டியுள்ளதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்திய அணி பந்துவீச்சில் மாற்றத்தைக் கண்டு வருவதால், என்னால் முடிந்த அளவுக்கு இளம் வீரர்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. நான் எத்தனை விக்கெட்டுகள் எடுக்கிறேன் என்பது குறித்துப் பெரியதாக யோசித்ததில்லை. இளம் வீரராக அணிக்காக விளையாடிபோது விக்கெட்டுகள் வீழ்த்துவது எனக்கு உற்சாகத்தை அளித்தது.  தற்போது விக்கெட்டுகள் எடுப்பதோடு பொறுப்புகளும் அதிகரித்துள்ளன என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT