செய்திகள்

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!

DIN

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் எடுத்துள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.

தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரிடோரியஸ் 76 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக ரிச்சர்டு 64 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் தரப்பில் ராஜ் லிம்பானி 3  விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முஷீர் கான் 2 விக்கெட்டுகளையும், நமன் திவாரி மற்றும் சௌமி பாண்டே தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமித் ஷாவால் பிரதமராக முடியாது! -தில்லி முதல்வர் கேஜரிவால்

விடாமுயற்சி வெளியீடு அப்டேட்!

மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் பலி: தந்தை கைது!

சிலையில்லை.. நிவேதிதா!

‘ஆல் இன் ஆல்‘ அழகுராணி!

SCROLL FOR NEXT