செய்திகள்

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணியிலிருந்து இவரும் விலகுகிறாரா?

தசைப்பிடிப்பு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

DIN

தசைப்பிடிப்பு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இதுவரை 2  போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும்  1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய விராட் கோலி இந்தத் தொடர் முழுவதும் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது. முதல் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்ற கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. 

இந்த நிலையில், தசைப்பிடிப்பு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: ஸ்ரேயாஸ் ஐயர் தசைப்பிடிப்பு மற்றும் முதுகு வலி இருப்பதாகக் கூறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT