செய்திகள்

அதிவேக சதம், கடைசி 7 போட்டிகளில் 7 சதம்: அசத்தும் கேன் வில்லியம்சன்!

Dineshkumar

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் 7 சதம் அடித்து அசத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசி. அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கேன் வில்லியம்சன் தனது 32வது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார்.

98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 32 சதம், 33 அரைசதம், 6 முறை இரட்டை சதத்தினையும் அடித்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 32 சதத்தினை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கேன் வில்லியம்சன் படைத்துள்ளார். மேலும் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் 7 சதம் அடித்து அசத்தியுள்ளார்.

நியூசிலாந்தில் அதிக சதங்கள் அடித்தவர் வரிசையில் வில்லியம்சன் 32 சதத்துடன் முதலிடத்தில் இருக்க ராஸ் டெய்லர் 19 சதத்துடன் 2வது இடத்தில் இருக்கிறார்.

குறிப்பாக 4வது இன்னிங்ஸில் 1040 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். சராசி 57.77 உடன் 5 சதம், 4 அரைசதம் அடங்கும்.

பேப்4-இல் அதிக சதங்கள் அடித்தவராகவும் இருக்கிறார். பேப்4 என்பது கிரிக்கெட்டில் அற்புதமாக விளையாடும் நால்வரைக் குறிக்கும். அதில் வில்லியம்சன் 32, ஸ்மித் 32, ரூட் 30, கோலி 29 சதங்களுடன் இருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு

கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன்; மனம் திறந்த ஆர்சிபி வீரர்!

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

SCROLL FOR NEXT