செய்திகள்

முன்னாள் கேப்டன் நினைவாக கருப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்!

மறைந்த தத்தாஜிராவ் கெய்க்வாட் நினைவாக இந்திய வீரர்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகின்றனர்.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் மூன்றாவது நாளில் முன்னாள் கேப்டன் தத்தாஜிராவ் கெய்க்வாடின் நினைவாக கைகளில் கருப்புப் பட்டை அணிந்து களமிறங்கினர்.

இந்திய அணியின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அறியப்பட்ட தத்தாஜிராவ் கெய்க்வாட் (வயது 95) அண்மையில் காலமானார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மறைந்த தத்தாஜிராவ் கெய்க்வாட்டின் நினைவாக இந்திய வீரர்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகின்றனர்.

தத்தாஜிராவ் இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், 1959 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியை அவர் வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சலுகைக் கட்டணத்தில் மெட்ரோ பாஸ்: மாணவா்களுக்கு தில்லி முதல்வா் உறுதி

நங்கூரத் தோழமை!

உலா் கண் நோய் - விழிப்புடன் தவிா்ப்போம்!

பெண் குழந்தைகளை பாதுகாப்போம்!

எல்லை பிரச்னைக்கு மத்தியிலும் சீனாவுடன் அதிகரிக்கும் வா்த்தகம்!

SCROLL FOR NEXT