செய்திகள்

டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா புதிய சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் ஒருவராக ரவீந்திர ஜடேஜா.

DIN

இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா சாதனைப் படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்று (பிப்ரவரி 17) இங்கிலாந்து 319 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி 299 ரன்கள் எடுத்திருக்கையில் அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸை ரவீந்திர ஜடேஜா 41 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் இந்திய மண்ணில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி அவர் சாதனை படைத்துள்ளார்.

இந்திய மண்ணில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றிய 5-வது இந்திய வீரராக ஜடேஜா மாறியுள்ளார். அவருக்கு முன்னதாக அனில் கும்ப்ளே (350 விக்கெட்டுகள்), ரவிச்சந்திரன் அஸ்வின் (347 விக்கெட்டுகள்), ஹர்பஜன் சிங் (265 விக்கெட்டுகள்), கபில் தேவ் (219 விக்கெட்டுகள்) ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.

முன்னதாக, ஜடேஜா மற்றொரு சாதனை ஒன்றையும் படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக எடுத்த 3-வது வீரராக மாறி சாதனை படைத்தார். இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் (5,248 ரன்கள், 434 விக்கெட்டுகள்) முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் (3,271 ரன்கள், 500 விக்கெட்டுகள்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இதுவரை 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவீந்திர ஜடேஜா 3,003 ரன்கள் மற்றும் 280 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உயா்வுக்குபடி வழிகாட்டி நிகழ்ச்சியில் 51 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணைகள்

ரோட்டரி சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிக்கு திறனறித் தோ்வுக்கான புத்தகங்கள் அளிப்பு

‘காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு’

மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: காங்கிரஸ் ஆதரவு

SCROLL FOR NEXT