செய்திகள்

மிகப் பெரிய வெற்றிக்கு வித்திட்ட இளம் வீரர்கள்; ரோஹித் சர்மா புகழாரம்!

டெஸ்ட் போட்டிகளில் அதிகம் விளையாடிய அனுபவமற்ற இளம் வீரர்கள் பெரிய வெற்றிக்கு வித்திட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

DIN

இளம் மற்றும் அனுபவமற்ற வீரர்கள் இந்தியாவுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பெறும் மிகப் பெரிய வெற்றி இதுவாகும்.

இந்த நிலையில், இளம் மற்றும் அனுபவமற்ற வீரர்கள் இந்தியாவுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மூன்றாவது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்குப் பிறகு ரோஹித் சர்மா பேசியதாவது: இது போன்ற மிகப் பெரிய வெற்றி பெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிகம் விளையாடிய அனுபவமற்ற இளம் வீரர்கள் இந்த வெற்றிக்கு வித்திட்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அறிமுக வீரர்கள் சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜுரல் சிறப்பாக விளையாடினர். அணியில் மூத்த வீரர்கள் இல்லாதபோது இளம் வீரர்கள் செயல்பட்ட விதம் சிறப்பாக இருந்தது. போட்டி 5-வது நாள் வரை செல்லும் என எதிர்பார்த்தேன். ஆனால், நான்காவது நாளிலேயே முடிவடையும் என எதிர்பார்க்கவில்லை என்றார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT