செய்திகள்

பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக இரண்டு தோல்விகள்!

DIN

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் முறையாக தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் 106 ரன்கள் வித்தியாசத்திலும் , ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில் 434 ரன்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவியது.

கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கான டெஸ்ட் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது.

கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இங்கிலாந்து அணியை 22 டெஸ்ட் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் வழிநடத்தியுள்ளார். அதில் இங்கிலாந்து 14 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

சென்னையில் வெப்பத்தை தணித்த மழை..!

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

SCROLL FOR NEXT