சதமடித்த மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 
செய்திகள்

சதமடித்து அசத்திய ஜோ ரூட்: முதல் நாளில் இங்கிலாந்து 302 ரன்கள் குவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்டில் முதல் நாளில் இங்கிலாந்து அணி 302 ரன்கள் குவிப்பு.

DIN

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட்டின் சதத்தால் இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று (பிப்ரவரி 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆகாஷ் தீப் இங்கிலாந்து அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சியளித்தார். ஸாக் கிராலி ( 42 ரன்கள்), பென் டக்கெட் (11 ரன்கள்) மற்றும் ஆலி போப் (0 ரன்) எடுத்து ஆகாஷ் தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அவரது அபார பந்துவீச்சினால் இங்கிலாந்து அணி 57 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பின் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறிது நேரம் தாக்குப் பிடித்தது. இருப்பினும், பேர்ஸ்டோ 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்தார் பென் ஃபோக்ஸ். இந்த இணை நிதானமாக விளையாடி இங்கிலாந்தின் ஸ்கோரை அதிகரிக்கச் செய்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்தினார். பென் ஃபொக்ஸ் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டாம் ஹார்ட்லி 13 ரன்களில் ஆட்டமிழக்க ரூட் மற்றும் ஆலி ராபின்சன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதமடித்து அசத்தினார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். ரூட் 106 ரன்களுடனும், ஆலி ராபின்சன் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT