முகப்பு
செய்திகள்

ரஞ்சிக் கோப்பை அரையிறுதி: தமிழ்நாட்டுக்கு எதிராக களமிறங்கும் ஸ்ரேயாஸ் ஐயர்!

தமிழ்நாட்டுக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 பிப்ரவரி, 2024 at 2:56 PM
கோப்புப்படம்
பகிர்:

ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாட்டுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணியில் இணைந்துள்ள்ளார்.

ரஞ்சிக் கோப்பைத் தொடரின் காலிறுதிப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. மத்திய பிரதேசம், விதர்பா, தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதிப் போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகள் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கான மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement

அரையிறுதிப் போட்டிக்கான மும்பை அணி விவரம்

அஜிங்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா, பூபென் லால்வானி, அமோக் பட்கல், முஷீர் கான், பிரசாத் பவார், ஹார்திக் தமோர், ஷர்துல் தாக்குர், ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன், ஆதித்யா துமால், துஷார் தேஷ்பாண்டே, மோஹித் அவஸ்தி, ராய்ஸ்டன் தியாஸ் மற்றும் தவால் குல்கர்னி.

தசைப்பிடிப்பு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம்பெறாமலிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments