செய்திகள்

தென்னாப்பிரிக்க ஆடுகளம் திருப்தியற்றது; ஐசிசி மதிப்பீடு!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற  நியூலேண்ட்ஸ் ஆடுகளம் திருப்தியற்றது என ஐசிசி மதிப்பிட்டுள்ளது.

DIN

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற  நியூலேண்ட்ஸ் ஆடுகளம் திருப்தியற்றது என ஐசிசி மதிப்பிட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமன் செய்தன. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெஸ்ட் வரலாற்றிலேயே மிகக் குறுகிய இடைவெளியில் முடிவடைந்த போட்டியாக மாறியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 642 பந்துகளே வீசப்பட்டன. இந்தப் போட்டிக்குப் பிறகு, இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஆடுகளத்தின் தன்மை குறித்து விமர்சனங்கள் எழுந்தன. 

இந்த நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற கேப் டவுன் ஆடுகளம் திருப்தியற்றது என ஐசிசி மதிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக ஐசிசி தொடர்பில் தெரிவித்திருப்பதாவது: நியூலேண்ட்ஸ் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமானதாக இருந்தது. பந்துகள் தீடிரென பௌன்சராகின்றன. பந்துகள் அதிகமாக பௌன்சரானதை ஆட்டம் முழுவதும் பார்க்க முடிந்தது. இது மாதிரியான ஆடுகளத்தில் விளையாடுவது மிகவும் கடினம். சில பேட்ஸ்மேன்கள் தங்களது கையுறைகளில் அடி வாங்கினர். அதிகப்படியான பௌன்சரால் நிறைய விக்கெட்டுகளும் விழுந்தன. நியூலேண்ட்ஸ் ஆடுகளம் திருப்தியற்றதாக இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நியூலேண்ட்ஸ் ஆடுகளம் குறித்து ஏற்கனவே விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

ஈரானுடனான வர்த்தக நாடுகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை!

காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி!

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT