படம் | ஐசிசி 
செய்திகள்

பாகிஸ்தான் டி20 அணிக்கு புதிய துணைக் கேப்டன் நியமனம்!

பாகிஸ்தான் அணியின் துணைக் கேப்டனாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

பாகிஸ்தான் அணியின் துணைக் கேப்டனாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5  போட்டிகள் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 12) ஆக்லாந்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் துணைக் கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான் டி20 அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்ட முகமது ரிஸ்வான், பாகிஸ்தான் டி20 அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டதை பெருமையாக கருதுகிறேன். எனக்கு இந்த பொறுப்பை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். பாகிஸ்தான் அணியின் கேப்டன், அணியில் உள்ள அனைவருடனும் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் என்றார்.

இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டு வந்த ஷதாப் கான் காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறை ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கை: ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

பிரதமா் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா பயணம்!

இடம் விற்பதாக ரூ.20 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்குப் பதிவு

மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

தமிழக புதிய டிஜிபியை தோ்வு செய்ய எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை: யுபிஎஸ்சி தகவல்

SCROLL FOR NEXT