செய்திகள்

சூப்பர் ஓவரில் ரோஹித் சர்மா ரிட்டையர்டு ஹர்ட்டா அல்லது ரிட்டையர்டு அவுட்டா?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரிட்டையர்டு ஹர்ட்டா அல்லது ரிட்டையர்டு அவுட்டா என்ற கேள்வி கிரிக்கெட் வட்டாரங்களில் எழுந்தது.

DIN

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரிட்டையர்டு ஹர்ட்டா அல்லது ரிட்டையர்டு அவுட்டா என்ற கேள்வி கிரிக்கெட் வட்டாரங்களில் எழுந்தது.

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், நேற்றையப் போட்டியிலும் இந்திய அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டிக்கு முடிவு கிடைக்க இரண்டு சூப்பர் ஓவர்கள் நடத்தப்பட்டன.

முதல் சூப்பர் ஓவரில் கடைசி பந்துக்கு முன்பாக ரோஹித் சர்மா பெவிலியன் திரும்பினார். ரிங்கு சிங் களமிறங்கினார். அதனால், ரோஹித் சர்மா ரிட்டையர்டு ஹர்ட்டா அல்லது ரிட்டையர்டு அவுட்டா என்ற கேள்வி எழுந்தது. ரோஹித் சர்மா மீண்டும் சூப்பர் ஓவரில் களமிறங்க இந்த கேள்வி அழுத்தமாக எழுந்தது. 

சர்வதேச கிரிக்கெட் விதியின்படி, சூப்பர் ஓவரில் ஒருவர் ரிட்டையர்டு அவுட் முறையில் வெளியேறினால், அவரால் மீண்டுமொரு சூப்பர் ஓவரில் களமிறங்க முடியாது. அப்படியிருக்க, ரோஹித் சர்மா சூப்பர் ஓவரில் மீண்டும் களமிறங்கியது சந்தேகத்தை எழுப்பியது. இதுதொடர்பாக விளக்கமளித்த களநடுவர்கள் எதிரணியின் கேப்டன் அல்லது பயிற்சியாளர் ஆட்சேபனை தெரிவிக்காவிட்டால் ஒருவர் மீண்டும் சூப்பர் ஓவரில் களமிறங்கலாம் என்றனர். 

முதல் சூப்பர் ஓவரில் இறுதிப் பந்துக்கு முன்னதாக ரோஹித் சர்மா பெவிலியன் திரும்பி ரிங்கு சிங் களமிறங்கியது சிறப்பான முடிவு எனப் பலரும் ரோஹித் சர்மாவை பாராட்டினர். ரோஹித்தின் இந்த முடிவினை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இது அஸ்வின் மாதிரியான சிந்தனை என்றார். ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனாதன் டிராட் பேசுகையில், எனக்கு களத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தெரியவே இல்லை. இதுபோன்ற போட்டிகளில் விதிமுறைகள் தெளிவாக வீரர்களுக்கு கூறப்பட வேண்டும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரிலிருந்து வெற்றிக் கணக்கை தொடங்குவோம்: உதயநிதி ஸ்டாலின்

உரிய ஆவணங்களின்றி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல்

திருமணம் செய்துவைக்க கோரி தந்தையை வெட்டிக் கொன்றாா் மகன்

கிராமங்களில் பெற்ற அனுபவம்தான் பிரதமரின் திட்டங்கள்: புதுவை துணைநிலை ஆளுநா்

தலைமை அஞ்சல் நிலையத்தில் தூய்மையே சேவை உறுதியேற்பு

SCROLL FOR NEXT