செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பர் கிடையாது!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் கீப்பராக செயல்பட மாட்டார் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் கீப்பராக செயல்பட மாட்டார் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் (ஜனவரி 25)  ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் கீப்பராக செயல்பட மாட்டார் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் அருமையாக கீப்பிங் செய்தார். இருப்பினும், இங்கிலாந்து தொடருக்காக இரண்டு கீப்பர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த 5 போட்டிகள் கொண்ட தொடருக்கு அவர்கள் இருவரிலிருந்து கீப்பர் தேர்வு செய்யப்படுவர் என்றார். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுலைத் தவிர கே.எஸ்.பரத் மற்றும் துருவ் ஜுரல் என இரண்டு கீப்பர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT