செய்திகள்

ஐசிசியின் சிறந்த கிரிக்கெட்டருக்கான விருதை வென்ற கம்மின்ஸ்!

2023ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த கிரிக்கெட்டருக்கான விருதுக்கு பாட் கம்மின்ஸ் தேர்வாகியுள்ளார்.

DIN

2023ஆம் ஆண்டில் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி, ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லுதல் என ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு மறக்க முடியாத ஆண்டாக இருக்கிறது. 

பேட்டிங், பௌலிங் என ஆல் ரவுண்டராக அசத்தும் கம்மின்ஸ் கேப்டனாகவும் தனது பொறுப்பினை சிறப்பாக செய்துவருகிறார். 

ஆண்டுதோறும் ஐசிசி விருதினை வழங்கும் ஐசிசி இந்த முறையும் விருதினை அறிவித்துள்ளது. டெஸ்டில் உஸ்மான் கவாஜாவுக்கும் ஒருநாள் போட்டியில் விராட் கோலிக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஆண்கள் கிரிக்கெட்டின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது பாட் கம்மின்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு மட்டும் பாட் கம்மின்ஸ் 24 சர்வதேச போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகள் 422 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். 

ஐசிசி அறிவித்த கனவு டெஸ்ட் அணிக்கும் பாட் கம்மின்ஸ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT