செய்திகள்

4-வது முறையாக விராட் கோலிக்கு ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருது!

2023 ஆம் ஆண்டின் ஐசிசியின் ஒருநாள் போட்டியில் சிறந்த வீரருக்கான விருதை இந்திய அணியின் விராட் கோலி வென்றுள்ளார்.

DIN

2023 ஆம் ஆண்டின் ஐசிசியின் ஒருநாள் போட்டியின் சிறந்த வீரருக்கான விருதை இந்திய அணியின் விராட் கோலி வென்றுள்ளார்.

இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் இந்திய அணியின் விராட் கோலிக்கு கடந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது. கடந்த ஓராண்டில் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 1,377 ரன்கள் குவித்தார். அதில் 6 சதங்கள் மற்றும் 8  அரைசதங்கள் அடங்கும்.

மேலும், கடந்த ஆண்டில் சச்சின் டெண்டுல்கரின் பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் முறியடித்தார். உலகக் கோப்பை தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார் விராட் கோலி. உலகக் கோப்பைத் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 765 ரன்கள் குவித்தார். 

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டின் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதினை விராட் கோலிக்கு ஐசிசி அறிவித்துள்ளது. 

இந்த விருது விராட் கோலி பெறும் 7-வது ஐசிசி விருதாகும். ஒருநாள் போட்டிகளில் 4-வது முறையாக சிறந்த வீரருக்கான விருதினை அவர் பெறுகிறார். இதற்கு முன்னதாக, கடந்த 2012, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதினை விராட் கோலி வென்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: கரடியின் பிடியில் இந்திய பங்குச் சந்தை!

ஐபோன் 16இ மாடலுக்கு ரூ. 11,000 ஆஃபர்! எப்படி?

கற்பனை உலகில் வாழும் மோடி அரசும், அதன் ஆதரவாளர்களும்: ஜெய்ராம் ரமேஷ்

தமிழக செய்தித்துறையில் வேலைவாய்ப்பு! ஆக. 18 வரை விண்ணப்பிக்கலாம்!

ஓவல் டெஸ்ட்டிலிருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்!

SCROLL FOR NEXT