முகப்பு
செய்திகள்

மீண்டும் சதம் விளாசிய முஷீர் கான்: நியூசிலாந்துக்கு 296 ரன்கள் இலக்கு!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் சூப்பர் 6 சுற்றில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:11 PM
படம் | பிசிசிஐ
பகிர்:

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் சூப்பர் 6 சுற்றில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்துள்ளது.

19  வயதுக்குட்பட்டோருக்கான சூப்பர் 6 போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்தது.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் சிங் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதன்பின் களம் கண்ட முஷீர் கான் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அவர் 126 பந்துகளில் 131 ரன்கள் எடுத்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இந்த உலகக் கோப்பையில் முஷீர் கான் அடித்துள்ள இரண்டாவது சதம் இதுவாகும். அவர்களைத் தொடர்ந்து அதிகபட்சமாக கேப்டன் உதய் சரண் 34 ரன்கள் எடுத்தார். இறுதியில், இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் மேசன் கிளார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.