முகப்பு
செய்திகள்

இந்திய அணியில் அறிமுகமாவது குறித்து மனம் திறந்த ரியான் பராக்!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் இந்திய அணியில் அறிமுகமாகவுள்ள ரியான் பராக் இந்திய அணிக்காக விளையாடவுள்ளது குறித்து மனம் திறந்துள்ளார்.

Updated On : 2 ஜூலை, 2024 at 1:01 PM
ரியான் பராக்
பகிர்:

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் இந்திய அணியில் அறிமுகமாகவுள்ள ரியான் பராக், இந்திய அணிக்காக விளையாடவுள்ளது குறித்து மனம் திறந்துள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் வருகிற ஜூலை 6 முதல் தொடங்கவுள்ளது.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா, ரியான் பராக், ஆவேஷ் கான், துருவ் ஜுரெல் உள்பட இளம் வீரர்கள் பலரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளதால், இளம் வீரர்களுக்கு இந்த டி20 தொடர் அவர்களது திறனை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் இந்திய அணியில் அறிமுகமாகவுள்ள ரியான் பராக், இந்திய அணிக்காக விளையாடவுள்ளது குறித்து மனம் திறந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எனது மாநிலத்தைச் (அஸ்ஸாம்) சேர்ந்த மக்கள் பெரிய அளவில் யோசிப்பதிலிருந்து விலகி இருக்கின்றனர். அதனை நான் மாற்ற விரும்புகிறேன். சர்வதேச போட்டிகளில் நான் இன்னும் விளையாட தொடங்கவில்லை. இந்திய அணிக்காக நான் விளையாட விரும்புகிறேன். இந்தியாவுக்காக நான் விளையாட ஆரம்பித்தவுடன், மக்களுக்கு அவர்களது வெற்றிக்கான பாதையை எப்படி தேர்ந்தெடுப்பது எனத் தெரிய வரும்.

நான் தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஐபிஎல் தொடரில் விளையாடிய பிறகு, எனது மாநில மக்களுக்கு சிறிய மாநிலத்தில் உள்ள ஒருவர் பெரிய அளவிலான இலக்கை அடைய முடியும் எனத் தெரிந்து கொள்கின்றனர். ஆனால், ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது மட்டும் பெரிய இலக்காக இருக்க முடியாது.

நீங்கள் ஓராண்டு விளையாடுவீர்கள். பிறகு, உங்களது ஆட்டம் மறைந்துவிடும். ஆனால், நான் இந்தியாவுக்காக விளையாடும்போது, எனது மாநில மக்களுக்கு சரியான வழிப்பாதையை அமைத்துக் கொடுப்பேன். அவர்களது வெற்றிக்கான பாதை அமைக்கப்படும். அவர்கள் அதனை அப்படியே பின் தொடர வேண்டுமென்பதில்லை. ஏனெனில், ஒவ்வொருக்கும் தனித்துவம் இருக்கிறது என்றார்.

அஸ்ஸாமிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடவுள்ள முதல் வீரர் ரியான் பராக் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →