கோப்புப் படம் 
செய்திகள்

பாகிஸ்தான் அணியில் பெரிய மாற்றங்களுக்கு இடமில்லை! காரணம் மூத்த வீரர்களா?

பாகிஸ்தான் அணியில் பெரிய மாற்றங்களுக்கு இடமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பாகிஸ்தான் அணியில் பெரிய மாற்றங்களுக்கு இடமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது மிகுந்த விமர்சனத்துக்குள்ளானது. இதனால் பாகிஸ்தான் அணியில் பெரிய மாற்றங்கள் வருமென எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்களால் அணியில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வரும் சனிக்கிழமை வெள்ளைப் பந்து அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டியன், மூத்த அணியின் மேலாளர் வாஹாப் ரியாஸ் ஆகியோர் உடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக இருக்கிறது.

இந்தக் கூடத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் நடக்காமல் அதே மாதிரியான வீரர்களாக அணியில் எடுக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் அணியின் நிறுவனத் தலைவர் மோஷின் நவி பெரிய மாற்றங்கள் நிகழ வேண்டுமென விரும்புகிறார். கேரி கிறிஸ்டின், வஹாப் ரியாஸின் அறிக்கையைப் பொருத்து முடிவுகள் எடிக்கப்படுமெனவும் அதேசமயம் மூத்த வீரர்களுடன் மோதல் ஏற்படாமல் அணியில் மாற்றங்களை செய்யுமாறும் மோஷின் நவி கூறியதாக பிடிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

வைகை அணையில் 69 அடியில் தண்ணீா் நிலைநிறுத்தம்

ரோல்பால் போட்டியில் சாம்பியன்: திண்டுக்கல் அணிக்கு பாராட்டு விழா

இலக்கு மட்டும்... சிம்ரன் சௌத்ரி

மாடர்ன் புறா... பிரியங்கா ஜவல்கர்

SCROLL FOR NEXT