டி20 ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்த பாகிஸ்தானின் தொடக்க வீரர்!
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரின் தரவரிசை முன்னேற்றம் குறித்து...
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சைம் ஆயுப் (23 வயது) ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பேட்டிங்கில் சொதப்பி வரும் சைம் ஆயுப் பந்துவீச்சில் அதிக விக்கெட்டுகள் குவித்து வருகிறார்.
பாகிஸ்தான் வீரர் சைம் ஆயுப் தொடக்க வீரராக இருந்தாலும் நன்றாக சுழல் பந்துவீசுவதால் ஆல்ரவுண்டராகவும் மாறியுள்ளார்.
Advertisement
Advertisement
டி20 உலகக் கோப்பையில் இதுவரை சைம் ஆயுப் 5 விக்கெட்டுகள் எடுத்து சராசரியாக 7.17 ரன்களை மட்டுமே வழங்கியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக கொழும்பில் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
ஜிம்பாப்வே அணியின் கேப்டம் சிக்கந்தர் ராஸாவை பின்னுக்குத் தள்ளி சைம் ஆயுப் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை
1. சைம் ஆயுப் - 303 புள்ளிகள் (பாகிஸ்தான்)
2. சிக்கந்தர் ராஸா - 297 புள்ளிகள் (ஜிம்பாப்வே)
3. ஹார்திக் பாண்டியா - 282 புள்ளிகள் (இந்தியா)
4. திபேந்திர சிங் ஐரே - 244 புள்ளிகள் (நேபாளம்)
5. அஸ்மதுல்லா ஓமர்சாய் - 244 புள்ளிகள் (ஆப்கன்)
Pakistan opener Saim Ayub (23 years old) has topped the ICC T20 all-rounder rankings.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.