அபிஷேக் சர்மா படம் | பிசிசிஐ
செய்திகள்

யுவராஜ் சிங் என்னை நினைத்து பெருமை கொள்வார்: அபிஷேக் சர்மா

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தன்னை நினைத்து பெருமைப்படுவார் என அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தன்னை நினைத்து பெருமைப்படுவார் என அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று (ஜூலை 7) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா சதம் விளாசி அசத்தினார். அவர் 47 பந்துகளில் 100 ரன்கள் (7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில், தனது குருவான யுவராஜ் சிங் தன்னை நினைத்து பெருமைப்படுவார் என அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் அபிஷேக் சர்மா பேசியதாவது: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டிக்குப் பிறகு யுவராஜ் சிங்கிடம் பேசினேன். நான் டக் அவுட் ஆனதற்கு அவர் ஏன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் எனத் தெரியவில்லை. இது நல்ல தொடக்கம் எனவும் கூறினார். ஆனால், 2-வது போட்டியில் நான் விளையாடிய விதத்தை நினைத்து அவர் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைவார்.

நான் சிறப்பாக விளையாடுவதற்கு காரணம் யுவராஜ் சிங் தான். என்னை சிறந்த வீரராக உருவாக்க அவர் கடினமாக உழைத்துள்ளார். 2-3 ஆண்டுகளாக அவர் எனது கிரிக்கெட் முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, எனது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காவும் கடினமாக உழைத்துள்ளார் என்றார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங், கிராந்தி கௌடுக்கு தலா ரூ. 1 கோடி பரிசு!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்

SCROLL FOR NEXT