தோனியை ரன் அவுட் செய்த மார்டின் கப்டில்.  படம்: மார்டின் கப்டில் / இன்ஸ்டா
செய்திகள்

இந்தியர்களின் வெறுப்புக்கு காரணம் கண்டுபிடித்துவிட்டேன்! ரசிகர்களை வம்பிழுத்த நியூசி. வீரர்!

நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் இந்திய ரசிகர்களை வம்பிழுத்த இன்ஸ்டா ஸ்டோரி வைரல்.

DIN

நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் இந்திய ரசிகர்களை வம்பிழுத்த இன்ஸ்டா ஸ்டோரி வைரலாகியுள்ளது.

இந்திய அணி 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியை சந்தித்தது. இந்த உலகக் கோப்பையுடன் எம்.எஸ்.தோனி ரன் அவுட் ஆகினார். அவரை ரன் அவுட் ஆக்கியது மார்டின் கப்டில்.

இந்தப் போட்டியுடன் தோனி ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் தோனி மற்றும் இந்திய ரசிகர்கள் ஒவ்வொரு வருடமும் ஜூலை 10 அன்று நியூசி. வீரர் மார்டின் கப்டிலை சமூக வலைதளத்தில் திட்டுவார்கள்.

இதனை கிண்டல் செய்யும் விதமாக மார்டின் கப்டில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “என்னை இவ்வளவு வெறுப்பதற்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டேன்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனி மட்டும் அப்போது ரன் அவுட் ஆலவில்லை என்றால் நாம் இன்னொரு உலகக் கோப்பையை வென்றிருக்கலாம் என இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்

SCROLL FOR NEXT