தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை அபார வெற்றி பெற்றது.
முதலில் தென்னாப்பிரிக்கா 17.1 ஓவா்களில் 84 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுக்க, இந்தியா 10.5 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் சோ்த்து வென்றது.
இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் 1-1 என சமனில் முடிவடையை, கோப்பையை இரு அணிகளும் பகிா்ந்துகொண்டன.
21 வயதான ஸ்ரேயங்கா பாட்டீல் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். 2023 ஆஸ்திரேலிய மகளிரணியுடன் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
மகளிர் கிரிக்கெட்டில் 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளும் மகளிர் டி20யில் 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
மகளிர் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. இந்த அணியில் ஸ்ரேயாங்கா பாட்டீல் இருந்தார். இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அப்போதிருந்தே ரசிகர்களிடம் பிரபலமாகினார்.
இது குறித்து வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:
சென்னை ரசிகர்களே, நீங்கள் அற்புதமானவர்கள்! போட்டிக்கு நீங்கள் அளித்த ஆதரவு நாங்கள் எதிர்பாராதது. அவ்வளவு பேர் வந்து போட்டியை கண்டதும் ஆதரவளித்ததும் எங்களுக்கு மிகப்பெரிய விசயம். நான் பந்து வீச வரும்போது அல்லது பெரிய திரையில் என்னைக் காண்பிக்கும் போதெல்லாம் நீங்கள் கொடுத்த ஆதரவினால் நான் வெட்கமடைந்தேன். அனைத்து அன்புக்கும் எனது நன்றிகள்! என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.