படம் | பிசிசிஐ
செய்திகள்

எங்களது வேலை இன்னும் முடியவில்லை; டி20 தொடரை வென்ற பிறகு ஷுப்மன் கில் பேச்சு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

DIN

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நாங்கள் சேஸிங்கில் சரியாக விளையாடவில்லை. இந்தப் போட்டியில் சேஸிங்கில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், எங்களது வேலை இன்னும் முடிந்துவிடவில்லை. இந்த அணி மிகச் சிறந்த அணி. அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். இந்த அணி தொடர்ந்து பல வெற்றிகளைப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அணியில் எந்தவொரு மாற்றம் செய்வது குறித்தும் பயிற்சியாளருடன் பேசவில்லை. அணியில் மாற்றமிருப்பின் நாளை போட்டிக்கு முன்னதாக தெரியப்படுத்துவேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

பவானியில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

ரயிலில் இருந்து தவறிவிழுந்த பயணியை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு

கனரக வாகனங்களை புறவழிச்சாலையில் இயக்க பாமக கோரிக்கை

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT