குடும்பத்தினருடன் ஷுப்மன் கில் படம் | ஷுப்மன் கில் (எக்ஸ்)
செய்திகள்

தோல்வியிலிருந்து தொடர்ச்சியாக 4 வெற்றிகள் எப்படி சாத்தியமானது? ஷுப்மன் கில் பதில்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு இந்தியாவுக்கு தொடர்ச்சியாக 4 வெற்றிகள் எப்படி சாத்தியமானது.

DIN

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு இந்தியாவுக்கு தொடர்ச்சியாக 4 வெற்றிகள் எப்படி சாத்தியமானது என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 14) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அசத்தியது.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தோல்வியுடன் தொடங்கிய இந்திய அணி, தொடர்ச்சியாக 4 வெற்றிகளைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு இந்தியாவுக்கு தொடர்ச்சியாக 4 வெற்றிகள் எப்படி சாத்தியமானது என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, வெற்றி பெற வேண்டும் என்ற எங்களது வேட்கை தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளதாக நினைக்கிறேன். டி20 தொடருக்காக இங்கு வந்த பிறகு, அதிக அளவு வலைப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு நேரமில்லை. அதனால் முதல் போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை எங்களால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதன்பின், ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு எங்களை மாற்றிக் கொண்டு தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள்

ரூ.12 லட்சத்தில் காரிய மேடை: பணிகள் தொடக்கம்

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

ஆகஸ்டில் 46 டிஎம்சி காவிரி நீர்: உறுதிப்படுத்த தமிழகம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT