படம் | பிசிசிஐ
செய்திகள்

விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற நினைத்தோம்; 4-வது டி20 போட்டி வெற்றி குறித்து ஜெய்ஸ்வால்!

விக்கெட் இழப்பின்றி போட்டியை முடிக்க வேண்டும் என நினைத்ததாக இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

DIN

விக்கெட் இழப்பின்றி போட்டியை முடிக்க வேண்டும் என நினைத்ததாக இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று (ஜூலை 13) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வேவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில், விக்கெட் இழப்பின்றி போட்டியை முடிக்க வேண்டும் என நினைத்ததாக இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நாங்கள் போட்டியில் வெற்றி பெறுவது குறித்து மட்டுமே யோசித்தோம். விக்கெட் இழப்பின்றி அணிக்கு வெற்றி பெற்றுத் தர வேண்டும் என விரும்பினோம். நான் விளையாடிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஷுப்மன் கில்லுடன் இணைந்து பேட் செய்தது மிகவும் அருமையாக இருந்தது. இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியும் எனக்கு உற்சாகமளிப்பதாகவும், பெருமை சேர்ப்பதாகவும் இருக்கிறது என்றார்.

நேற்றையப் போட்டியில் ஜெய்ஸ்வால் 93 ரன்களுடனும், கேப்டன் ஷுப்மன் கில் 58 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான்: மோதலில் 7 போலீஸாா், 6 பயங்கரவாதிகள் பலி!

வேன்-பைக் மோதல்: வியாபாரி மரணம்

கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்

ஹூண்டாய் விற்பனை 10% அதிகரிப்பு

இறுதிச் சுற்றில் வலேன்டின்! ஜோகோவிச் அதிா்ச்சித் தோல்வி!

SCROLL FOR NEXT