படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
செய்திகள்

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்!

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி நியமிக்கப்பட உள்ளதாக தகவல்.

DIN

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிசிசிஐ செயலர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பதவி வகித்து வருகிறார். சுழற்சி முறையில் இந்த ஆண்டின் இறுதியில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அடுத்த தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி நியமிக்கப்பட உள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் அவரை அடுத்த தலைவராக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிக்கும். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு தலைவர் பொறுப்பில் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவிலும், வருகிற 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தொடர் வங்கதேசத்திலும் நடத்தப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நேற்று (ஜூலை 29) அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT