ஷாகின் அஃப்ரிடி படம் |ஐசிசி
செய்திகள்

பாகிஸ்தானுக்காக விளையாடுகிறேன், கேப்டன் பதவிக்காக அல்ல: ஷாகின் அஃப்ரிடி

கேப்டனாக நியமிக்கப்பட்ட 6 மாதத்திலேயே கேப்டன் பதவியை இழந்த பாகிஸ்தான் வீரர் ஷாகின் ஷா அஃப்ரிடி குறித்து...

DIN

தனிப்பட்ட சாதனைகளைக் காட்டிலும் பாகிஸ்தானுக்காக விளையாடுவதிலேயே கவனம் செலுத்துவதாக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவிலிருந்து பாபர் அசாம் விலகினார். இதனையடுத்து, கடந்த ஆண்டு நவம்பரில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக வேகப் பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அஃப்ரிடி நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், கேப்டனாக நியமிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள்ளாகவே ஷாகின் ஷா அஃப்ரிடி அவரது கேப்டன் பதவியை இழந்தார். இந்த 6 மாத கால இடைவெளியில் அவர் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் மட்டும் பாகிஸ்தான் அணியைக் கேப்டனாக வழிநடத்தினார். டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக பாபர் அசாம், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியை இழந்தது குறித்து ஷாகின் ஷா அஃப்ரிடி பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு முன்னுரிமை அளிப்பேன். அதன்பிறகு பாகிஸ்தான் அணி மற்றும் எனது தனிப்பட்ட சாதனைகள் குறித்து சிந்திப்பேன். நான் கடந்த காலத்தில் இருக்க மாட்டேன். நான் நிகழ்காலத்தில் இருப்பதை விரும்புகிறேன். எதிர்காலத்தை குறித்தும் நான் கவலைப்படுவதில்லை. நிகழ்காலம் சரியாக இருந்தால், எதிர்காலமும் நன்றாக அமையும். பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவதும், நியமிக்கப்படாததும் எனது கட்டுப்பாட்டில் இல்லை. இதுபோன்ற விஷயங்களுக்காக நான் கிரிக்கெட் விளையாடுவதும் இல்லை.

பாகிஸ்தானுக்கு பெருமை சேர்ப்பதற்காகவே விளையாடுகிறேன். பாகிஸ்தானுக்காக நிறைய போட்டிகளை வென்று கொடுப்பேன். என்னைப் பற்றி எதிர்மறையாக எழுதப்படுவதை நான் பார்ப்பதில்லை. அதனைப் பார்த்தால், பாகிஸ்தானுக்காக என்னால் எப்படி நன்றாக விளையாட முடியும். பாகிஸ்தானுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தொடர்ந்து விளையாடுவேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடுதல் வரிகளை நீக்கினால் நாட்டுக்கு பேரழிவு: நீதிமன்ற தீர்ப்பு குறித்து டிரம்ப்

ஜம்மு - காஷ்மீரைப் புரட்டிப்போடும் பேரிடர்! 10 பேர் பலி?

ஓய்வுபெறும் நாளில் ஊழியர்கள் இடைநீக்கம் இல்லை: தமிழ்நாடு அரசு

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: பவுன் ரூ.77,000-ஐ நெருங்கியது!

இந்திய யானையை அமெரிக்க எலி தாக்குவது போலத்தான் டிரம்ப் வரி: ரிச்சர்டு வோல்ஃப்

SCROLL FOR NEXT