இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மேத்யூ மோட் விலகியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மேத்யூ மோட், பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பதிவிட்டிருப்பதாவது: இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மேத்யூ மோட் விலகுகிறார். உதவிப் பயிற்சியாளர் மார்கஸ் டிரஸ்கோத்திக் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவார் என பதிவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.