செய்திகள்

ஷுப்மன் கில்லுடன் டிசம்பரில் திருமணமா? பாலிவுட் நடிகை விளக்கம்!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்லுடன் திருமணம் என்ற செய்திக்கு பாலிவுட் நடிகைக்கு பதிலளித்துள்ளார்.

DIN

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்லுடன் திருமணம் என்ற செய்திக்கு பாலிவுட் நடிகைக்கு பதிலளித்துள்ளார்.

24 வயதான இளம் இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் 25 டெஸ்டில் 1492 ரன்களும் 44 ஒருநாள் போட்டிகளில் 2271 ரன்களும் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்படுகிறார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் ரிசர்வ் வீரராக தேர்வாகியுள்ளார்.

ரிதிமா பண்டிட்

பாலிவுட் சீரியல் நடிகை ரிதிமா பண்டிட் ஷுப்மன் கில்லை இந்தாண்டு டிசம்பரில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது. இது குறித்து நடிகை ரிதிமா பண்டிட் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “யாரோ சில மனிதர்களின் கற்பனை இது. யாரோ கிளப்பி விட்டு சமூக வலைதளத்தில் வைரலாக்கிவிட்டார்கள். எனக்கு ஷுப்மன் கில் உடன் பழக்கம்கூட இல்லை. காலையில் இருந்து வாழ்த்து குறுஞ்செய்திகளும் தொலைப்பேசி அழைப்புகளுமாக வந்துகொண்டு உள்ளன. இது முற்றிலும் அபத்தமானது.

நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். ஆனால் இதுபோன்ற வதந்திகளால் எனக்கு இனிமேல் யாரும் புரபோஸ் செய்வார்களா என்று சந்தேகம் உள்ளது. இதனால் எனக்கு பிரச்னைகள்தான் வரும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் விடியோ ஒன்றினைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT