படம் | ஐசிசி
செய்திகள்

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வெல்லப் போவது யார்?

ஐசிசியின் மே மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் உள்ள வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

DIN

ஐசிசியின் மே மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் உள்ள வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு ஐசிசியின் சிறந்த வீரர் விருதினை ஐசிசி வழங்கி வருகிறது. அந்த வரிசையில் மே மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் குடகேஷ் மோட்டி, பாகிஸ்தான் அணியின் ஷகின் அஃப்ரிடி மற்றும் அயர்லாந்து அணியின் லோர்கான் டக்கர் ஆகியோர் உள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் குடகேஷ் மோட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல அண்மைக் காலமாக நடைபெற்ற ஆட்டங்களில் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷகின் அஃப்ரிடி சிறப்பாக செயல்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் அயர்லாந்து வீரர் லோர்கான் டக்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவர்கள் மூவரில் மே மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரருக்கான விருதினை வெல்லப் போவது யார் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருத்துவ சாதனங்கள் மருந்தகத்துறை, உற்பத்தியில் முதலீடு: இந்திய நிறுவனங்களுக்கு இலங்கை அமைச்சா் அழைப்பு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

பெண்களிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு: கா்நாடகத்தைச் சோ்ந்த இருவா் கைது

மகளை கடத்தி கட்டாயத் திருமணம்: தாய், ஆண் நண்பா் கைது

மின் விளக்கு எரியாததை கண்டித்து தீப்பந்தங்களுடன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஊா்வலம்

SCROLL FOR NEXT