செய்திகள்

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற கோல்ஃப் வீரர், வீராங்கனைகள்!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு கோல்ஃப் பிரிவில் இந்தியா சார்பில் 4 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க தகுதிபெற்றுள்ளனர்.

DIN

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு கோல்ஃப் பிரிவில் இந்தியா சார்பில் 4 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க தகுதிபெற்றுள்ளனர்.

நடப்பாண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸ் நகரில் ஜூலை 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் ஆகஸ்ட் 1 முதல் 4ஆம் தேதி வரையிலும், பெண்கள் பிரிவில் ஆகஸ்ட் 7 முதல் 10ஆம் தேதி வரையும் கோல்ஃப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பை சர்வதேச கோல்ஃப் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆண்கள் பிரிவில் ககன்ஜீத் புல்லார், சுபாங்கர் சர்மா ஆகியோரும் பெண்கள் பிரிவில் அதிதி அசோக், தீக்‌ஷா தாகர் ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக் தரவரிசையில் சுபாங்கர் சர்மா 48வது இடத்திலும், ககன்ஜீத் புல்லார் 54வது இடத்திலும் உள்ளார். இதேபோன்று அதிதி 24வது இடத்திலும், தீக்‌ஷா 40வது இடத்திலும் உள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அதிதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஸ்மிருதி மந்தனா!

சட்டவிரோத வாக்காளர் அட்டை விநியோகம்: காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப் பதிவு!

நீக்கப்பட்டவர்களின் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட உத்தரவு!

2032-க்குள், ரூ. 75,000 கோடி முதலீடு இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு இயற்பியலுக்கான நோபல்!

SCROLL FOR NEXT