டேவிட் வார்னர் உடன் யுவ்ராஜ் சிங்.  படங்கள்: யுவ்ராஜ் சிங் / எக்ஸ்
செய்திகள்

வாழ்க்கையின் விளையாட்டு! டேவிட் வார்னரின் ஓய்வுக்கு யுவ்ராஜ் சிங் உருக்கம்!

டேவிட் வார்னர் ஓய்வுக்கு யுவ்ராஜ் சிங் உருக்கமான பதிவினை எழுதியுள்ளார்.

DIN

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் டேவிட் வாா்னா் சா்வதேச கிரிக்கெட்டில் இருந்து நேற்று (ஜூன் 25) ஓய்வு பெறுவதாக அறிவித்தாா்.

37 வயதான வாா்னா் டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தாா். கடந்த 2009-இல் அறிமுகமான வாா்னா், டி20யில் 110 ஆட்டங்களில் 3,277 ரன்களையும், 112 டெஸ்ட் ஆட்டங்களில் 8,786 ரன்களையும், 161 ஒருநாள் ஆட்டங்களில் 6932 ரன்களையும் விளாசியுள்ளாா்.

மேலும் ஸ்லிப்பில் பீல்டிங் செய்வதில் மிகவும் திறமையானவா். 2018-இல் தென்னாப்பிரிக்க தொடரில் பந்தை சேதப்படுத்திய புகாரிலும் சிக்கி அணியை விட்டு நீக்கப்பட்டாா். ஓய்வு அறிவிப்புடன் 15 ஆண்டுகள் சா்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

புஷ்பா படத்தின் நடனங்களை ஆடி இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் டேவிட் வார்னர். இந்திய ரசிகர்கள் அவரை ஒரு இந்தியராகவே பார்க்கிறார்கள்.

இது குறித்து முன்னாள் இந்திய வீரர் சிக்ஸர் மன்னன் யுவ்ராஜ் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

யாருமே அமைதியான ஓய்வை விரும்பமாட்டார்கள். ஆனால் அதுதான் வாழ்க்கையின் விளையாட்டாக இருக்கிறது. உங்களது அபாரமான கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள்.

பந்தினை பவுன்டரிக்கு அதிரடியாக அடிப்பதிலிருந்து பாலிவுட் நடனங்கள், வசனங்கள் வரை எல்லாமே வார்னரின் பாணியில் சிறப்பாக செய்துள்ளீர்கள்.

பயங்கரமான தொடக்க வீரர், உற்சாகமான அணி வீரர், ஆடுகளத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உண்மையான மகிழ்விப்பவர்.

உங்களுடன் விளையாடியதும் ஓய்வு அறையில் பழகியதும் எனக்கு மகிழ்ச்சியானது. அழகான குடும்பத்துடன் காலம் கழிய வாழ்த்துகள் லெஜண்ட் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரியமான லெஹெங்கா... ஆம்னா ஷரீஃப்!

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

SCROLL FOR NEXT