தமிழக அணிக்கு எதிராக பந்து வீசும் சிஎஸ்கே வீரர் ஷர்துல் தாக்குர்.  bcci / X
செய்திகள்

ரஞ்சி கோப்பை: தமிழக அணிக்கு எதிராக அசத்தும் சிஎஸ்கே வீரர்கள்!

ரஞ்சி கோப்பை அரையிறுதியில் தமிழ்நாடு- மும்பை அணிகள் விளையாடுகின்றன.

DIN

ரஞ்சி கோப்பை அரையிறுதியில் தமிழ்நாடு- மும்பை அணிகள் விளையாடுகின்றன. மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் விதர்பா-மத்திய பிரதேசம் அணிகளும் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங்கினை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களான சாய் சுதர்ஷன் (0), ஜகதீஷன் (4)சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். அடுத்து வந்த பிரதோஷ் ரஞ்சன் (8), சாய் கிஷோர் (1), பாபா இந்திரஜித் 11) உள்பட டாப் ஆர்டர்கள் சொதப்பினார்கள்.

தற்போது சிஜித் ராம் (12*) , வாஷிங்டன் சுந்தர் (35* ) விளையாடி வருகிறார்கள். 56 ஓவர் முடிவில் தமிழக அணி 135/7 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் ஷங்கர் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மும்பை சார்பாக துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளும் ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டுகளும், மோஹித் அவஸ்தி, முஷிர் கான் தலா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

இதில் ஷர்துல் தாக்குர், துஷார் தேஷ்பாண்டே ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அணிக்கு சிஎஸ்கே வீரர்களே இப்படி விளையாடுவது குறித்து தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைவதா? சோகமடைவதா எனக் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருத்துவ சாதனங்கள் மருந்தகத்துறை, உற்பத்தியில் முதலீடு: இந்திய நிறுவனங்களுக்கு இலங்கை அமைச்சா் அழைப்பு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

பெண்களிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு: கா்நாடகத்தைச் சோ்ந்த இருவா் கைது

மகளை கடத்தி கட்டாயத் திருமணம்: தாய், ஆண் நண்பா் கைது

மின் விளக்கு எரியாததை கண்டித்து தீப்பந்தங்களுடன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஊா்வலம்

SCROLL FOR NEXT