ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப்படம்) 
செய்திகள்

அஸ்வின் சுழற்பந்துவீச்சின் பொறியாளர்: முன்னாள் இங்கிலாந்து வீரர்

ரவிச்சந்திரன் அஸ்வினை சுழற்பந்துவீச்சின் பொறியாளர் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் புகழ்ந்துள்ளார்.

DIN

இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினை சுழற்பந்துவீச்சின் பொறியாளர் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் புகழ்ந்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடும் 100-வது டெஸ்ட் போட்டியாகும்.

இந்த நிலையில், இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினை சுழற்பந்துவீச்சின் பொறியாளர் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் புகழ்ந்துள்ளார்.

மாண்டி பனேசர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அஸ்வின் மிகச் சிறந்த வீரர். கடந்த 2012 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது அவரை முதல் முறையாக சந்தித்தேன். அவர் பந்துவீசும் முறையில் புதிது புதிதாக மாற்றங்களை கொண்டு வந்துகொண்டே இருக்கிறார். பந்துவீசுவது கோணம், கணிதம் மற்றும் தரவுகள் சம்பந்தப்பட்டது. அதனால், அஸ்வின் சுழற்பந்துவீச்சின் பொறியாளர் என நினைக்கிறேன் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிராக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 105 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக மாநாட்டை கண்டித்து மரத்தை வெட்டி சாலையில் கிடத்தி மலைவாழ் மக்கள் மறியல்

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

மாா்த்தாண்டம் அருகே நூதன முறையில் நகை திருட்டு

காட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 21 போ் காயம்!

ஜம்மு - காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடம் சுற்றிவளைப்பு

SCROLL FOR NEXT