செய்திகள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்!

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

DIN

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தோல்வியுடன் தொடங்கிய இந்திய அணி அதன்பின் 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 4 வெற்றிகள் பெற்றதன் மூலம் ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் 122 ரேட்டிங் புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இந்த வரிசையில் 117 ரேட்டிங் புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், 111 ரேட்டிங் புள்ளிகளுடன் இங்கிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியதன் மூலம் இந்திய அணி அனைத்து வடிவிலான போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையிலும் முதலிடம் பெற்றுள்ளது. ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் 121 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 118 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், 110 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன. டி20 அணிகளுக்கான தரவரிசையில் 266 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 256 புள்ளிகளுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 255 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையிலும் இந்திய அணி 68.51 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான்கரை மணிநேரம், 100 காவலர்கள்... மாணவியைக் கண்டுபிடிக்காதது ஏன்? இபிஎஸ் கேள்வி

ஆளுங்கட்சி உறுப்பினரின் குடும்பத்தினர் மூவர் சடலமாக மீட்பு! போலீஸார் விசாரணை

இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி, ஜெமிமா, ராதாவுக்கு தலா ரூ. 2.25 கோடி; பயிற்சியாளருக்கு ரூ. 22.5 லட்சம்! - மகாராஷ்டிர அரசு

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

விஜய் தலைமையில் இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

SCROLL FOR NEXT